தமிழ்நாடு

தமிழகத்தில் அதிகமாக கொரோனா பரவும் 5 மாவட்டங்கள்: சுகாதாரத்துறை

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக நாளுக்குநாள் பரவி வருகிறது என்பதும் மார்ச் 1ம் தேதி இருந்த கொரோனா வைரஸ் பரவல் எண்ணிக்கைக்கும் மார்ச் 23ஆம் தேதி இருந்த கொரோனா வைரஸ் பரவல் எண்ணிக்கைக்கும் உள்ள வேறுபாடு இரு மடங்கை விட அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக சென்னை உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் தான் மிகவும் அதிகமாக கொரோனா வைரஸ் பாதித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலை சற்று முன் வெளியான தகவலின் படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அமைச்சகம் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிகவும் அதிகமாக தினசரி கொரோனா பாதிப்பு இருப்பதாகவும் அந்த ஐந்து மாவட்டங்களிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய 5 மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. எனவே தேர்தல் முடிந்த பின் இந்த ஐந்து மாவட்டங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றே கூறப்பட்டு வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version