தமிழ்நாடு

கமல் கூட்டணியில் சரத்குமார், ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?

Published

on

திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் கிட்டத்தட்ட கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கி விட்டது என்பது தெரிந்ததே. திமுக கிட்டத்தட்ட முழுமையாக தொகுதிகளை ஒதுக்கும் பணியை முடித்துவிட்ட நிலையில் அதிமுக தரப்பிலிருந்து இன்னும் தேமுதிகவுக்கு மட்டுமே ஒதுக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால் அக்கட்சியுடனான பேச்சுவார்த்தையில் இழுபறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திமுக, அதிமுக தவிர புதிய அணியை அமைத்திருக்கும் கமலஹாசனும் தங்களது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பணியை முடித்து உள்ளார். கமல்ஹாசன் கூட்டணியில் இணைந்துள்ள சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 தொகுதிகளும் ஐஜேகே கட்சிக்கு 40 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மீதி உள்ள 154 தொகுதிகளில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து கமல் கூட்டணியும் தொகுதி உடன்பாடு பணியை முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. திமுக அதிமுக மற்றும் கமல் கூட்டணி ஆகிய மூன்று கூட்டணிகளுடன் சீமான் மற்றும் அமமுக கூட்டணியும் வரும் தேர்தலில் போட்டியிடுவதால் ஐந்துமுனை போட்டி உருவாகியுள்ளது.

தினகரனின் அமமுக கட்சியை ஓவைசி கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது என்பதும், அக்கட்சிக்கு தினகரன் மூன்று தொகுதிகளை ஒதுக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

Trending

Exit mobile version