தமிழ்நாடு

ரூ.6000 நிவாரணத்தொகை அறிவிப்பு: மேலும் ஒரு வாக்குறுதியை நிறைவேற்றிய முதல்வர்!

Published

on

தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்ற இந்த ஆறுமாத காலத்தில் பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார் என்பதும் அறிவிக்கப்படாத வாக்குறுதிகளையும் அவ்வாறு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக மகளிர்களுக்கு இலவசப் பேருந்துகள், தங்க நகை கடன் தள்ளுபடி அறிவிப்பு உள்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி உள்ளன என்பதும் இன்னும் சில அறிவிப்புகள் வெளியாக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தால் மீனவர்களுக்கான மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையை ரூ5,000ல் இருந்து ரூ.6000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை 6 ஆயிரமாக உயர்த்தி தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் சற்று முன் அறிவிப்பு செய்துள்ளார்.

இந்த அறிவிப்பை அடுத்து மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை ரூபாய் 6000 மீனவர்களுக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மீனவர்கள் மற்றும் மீனவர்களின் சங்கங்கள் தமிழக முதல்வருக்கு தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version