தமிழ்நாடு

அமைச்சரை தூக்கி சென்ற மீன்வர்கள்: வீடியோவால் சர்ச்சை

Published

on

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களை மீனவர்கள் தூக்கி சென்ற வீடியோ ஒன்று வைரலாகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பழவந்தாங்கல் என்ற பகுதியில் ஆய்வு செய்யச் சென்ற அமைச்சர் அனிதா ராமச்சந்திரனின் படகில் இருந்து இறங்கும் போது அவருடைய காலிலிருந்த செருப்பு நனையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மீனவர்கள் அவரை தூக்கிச் சென்று கரையில் சேர்த்ததாக கூறப்படுகிறது. இது குறித்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் மீனவர்களை அவர் வேலைக்காரர்கள் போல் நடத்துவதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

இது குறித்து நடிகையும் பாஜக பிரபலமான காயத்ரி ரகுராம் தனது டுவிட்டரில் வீடியோவுடன் ஒரு பதிவை போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

மீனவர்கள் என்னை அன்பு மிகுதியால் தான் தூக்கிச் சென்றனர் என்றும் நான் என்னை தூக்கிச் செல்லுங்கள் என்று நான் யாரிடமும் கூறவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் அன்பு மிகுதியால் மீனவர்களை என்னை தூக்கிச் சென்றதை யாரும் சர்ச்சையாக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் பழவேற்காடு முகத்துவாரத்தில் இதுவரை நேரில் ஆய்வு செய்ய யாரும் வந்ததில்லை என்று மீனவர்கள் என்னிடம் கூறினார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பழவேற்காடு ஆய்வின்போது மீனவர்கள் தன்னைத் தூக்கிச் சென்றது குறித்து அனிதா ராமச்சந்திரன் அவர்கள் கூறிய விளக்கத்தையும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version