தமிழ்நாடு

திடீரென உள்வாங்கிய கடல்: மன்னார் வளைகுடா பகுதியில் பரபரப்பு!

Published

on

மன்னார் வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை திடீரென 500 மீட்டருக்கும் மேலாக கடல் உள்வாங்கியதால் அந்த பகுதியில் உள்ள மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அச்சம் அடைந்தனர்.

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த சில நாட்களாக சூறைக்காற்று வீசி வருகிறது. இதனை அடுத்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தனர். இதனால் மீனவர்கள் கடலோரப் பகுதியில் தங்கள் படகுகளை நிறுத்தி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சூறைக்காற்று காரணமாக சாலைகளில் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது என்பது அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் கடல் பகுதியில் திடீரென கடல் உள்வாங்கியது. இதனால் மீனவர்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர். சுமார் 500 மீட்டர் வரை திடீரென கடல் உள்வாங்கியது குறிப்பு கடல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடல் உள்வாங்கி இதன் காரணமாக கடற்கரை பகுதியில் நங்கூரம் போட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெரிய படகுகள் தரை தட்டியதால் ஒன்றோடொன்று படகுகள் மோதி சேதம் அடைந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும் திடீரென கடல் உள்வாங்கியதால் கடற்கரையோரங்களில் வசிக்கக்கூடிய அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் வெளியே தெரிந்தன என்பதும் அவற்றை பொதுமக்கள் கண்டு ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சிறிது நேரத்தில் உள்வாங்கிய கடல் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Trending

Exit mobile version