உலகம்

சமுக சீர்திருத்த முயற்சி… முதன்முறையாக மெக்காவுக்கு பெண்கள் ராணுவ அணி பாதுகாப்பு!

Published

on

வரலாற்றிலேயே முதன்முறையாக பெண்கள் ராணுவ வீராங்கனைகள் மெக்கா வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இஸ்லாம் மதத்தின் பிறப்பிடமாகக் கருதப்படும் மெக்காவில் பெண்கள் ராணுவத்தினர் ஹஜ் காலமான தற்போது பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சவுதி மன்னர் முகமது பின் சல்மான் சவுதியின் பழமைவாத இஸ்லாமிய சமுகத்தில் நாகரிகத்தைப் புகுத்தவும் சமுக மற்றும் பொருளாதார சீரமைப்புகள் மேற்கொள்ளவும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இதற்காக தற்போது ஹஜ் காலம் என்பதால் மெக்காவில் மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. பாதுகாப்புக்காக முதன்முறையாக பெண்கள் ராணுவத்தினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரம் மாதம் முதல் இருந்தே மெக்கா மற்றும் மெதினாவின் பாதுகாப்பு சேவைகளில் பெண்கள் ராணுவத்தினரை ஈடுபடுத்தத் தொடங்கினர்.

சவுதி மன்னரின் ‘விஷன் 2030’ என்னும் திட்டத்தின் கீழ் முதன்முறையாக பெண்களுக்கு கண்காணிப்பு இன்றி வாகனம் ஓட்ட அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர் குடும்ப விஷயங்களில் பெண்களின் முடிவுகளுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் சட்டம் பிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version