சினிமா செய்திகள்

‘அவன கண்டா வரச் சொல்லுங்க…’- ச.நா இசையில் தனுஷ்-ன் ‘கர்ணன்’ முதல் பாடல்..!

Published

on

நடிகர் தனுஷ் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள கர்ணன் திரைப்படத்தின் முதல் பாடல் ‘கர்ணன் அழைப்பு’ தற்போது வெளியாகி உள்ளது.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள இரண்டாவது திரைப்படம் கர்ணன். இயக்குநர் மாரி செல்வராஜின் முதல் படமான பரியேறும் பெருமாள் படத்துக்குப் பின்னர் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே கர்ணன் படம் தற்போது தயாராகி உள்ளது.   இந்தப் படத்துக்கு இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் நடிகர் ரஜீஷா என்னும் மலையாள நடிகை நாயகி ஆக நடித்துள்ளார்.

கர்ணன் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது தொழில்நுட்பப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படம் வருகிற ஏப்ரல் மாதம் 9-ம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version