தமிழ்நாடு

முதல்வர் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம்: முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தகவல்

Published

on

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று தமிழக முதல்வராக முகஸ்டாலின் பதவி ஏற்றார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் மட்டுமின்றி அவருடன் 33 அமைச்சர்கள் பதவியேற்றனர் என்பதும் அமைச்சர்கள் அனைவரும் தங்களது துறையில் பணிகளை தொடங்கி விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் புதிய அமைச்சரவையின் முதல் அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் நாளை 11:30 மணிக்கு நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்றும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒருசில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் மே 10ஆம் தேதி முதல் சட்டப் பேரவை கூட்டம் நடைபெற உள்ள நிலையில் முதல் கூட்டத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.

seithichurul

Trending

Exit mobile version