இந்தியா

முத்தலாக் திருத்த மசோதா கீழ் முதல் கைது!

Published

on

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, ஜூலை 25-ம் தேதி இஸ்லாமிய பெண்கள் பாதுகாப்பு திருத்த மசோதாவை இயற்றியது. அதன் பிறகு முத்தலாக் மூலம் பெண்ணை விவாகரத்து செய்ததாக முதல் முறையாகக் கேரளாவில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முத்தலாக் திருத்த மசோதாவின் கீழ் இஸ்லாமிய பெண்ணை விவாகரத்து செய்வது ஜூலை 25-ம் தேதி முதல் சட்ட விரோதமானது. இந்நிலையில் ஆகஸ்ட் 1-ம் தேதி கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள 34 வயதான ஹூசம் தனது மனைவியை மூன்று முறைத் தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார்.

இதை அடுத்து தாமரசேரி நீதிமன்றத்தில் ஹூசமுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், முத்தலாக் கூறி விவாகரத்து செய்தது உறுதி செய்யப்பட்டதன் பேரில் வெள்ளிக்கிழமை சிறை தண்டை அளிக்கப்பட்டு உத்தரவிட்டுள்ளது.

முத்தலாக் திருத்த மசோதா 2019-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி மக்களவையில் முழுமையாக நிறைவேறியதால், அதை மீறி விவாகத்து செய்யும் இஸ்லாமியர்களுக்கு மூன்று ஆண்டு வரை சிறைத் தண்டனை வழங்கப்படும்.

seithichurul

Trending

Exit mobile version