சினிமா செய்திகள்

தீர்ப்புகள் விற்கப்படும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Published

on

சத்யராஜ் என்றாலே நடிப்பும் நக்கலும் கலந்த கலவை என்றே சொல்லலாம். சத்யராஜ் காமெடி படங்களில் எப்படி அசத்துகிறாரோ, அதைவிட வலுவான கட்டப்பா போன்ற கம்பீரமான வேடங்களிலும் பட்டையை கிளப்புவார். சமீபகாலமாக ஹீரோவாக நடிக்காமல் தந்தை வேடம் அல்லது குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வரும் சத்யராஜ், மீண்டும் கதையின் நாயகனாக நடிக்கவுள்ளார்.

இயக்குநர் தீரன் இயக்கத்தில் உருவாகி வரும் தீர்ப்புகள் விற்கப்படும் படத்தில் சத்யராஜ் கதையின் நாயகனாக மீண்டும் களமிறங்குகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். சிவகார்த்திகேயனின் தயாரிப்பு படமான கனா மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய படங்களில் சத்யராஜ் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தீர்ப்புகள் விற்கப்படும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில், கம்பீரமான தோற்றத்தில், இளம் நடிகர்களை விஞ்சும் அளவிற்கு, கருப்புநிற டிசர்ட் அணிந்து கையில் சுத்தியலுடன் மாஸாக போஸ் கொடுத்துள்ளார் சத்யராஜ்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version