சினிமா செய்திகள்

கிரிக்கெட் வீரர் தோனி தயாரிப்பில் “எல்ஜிஎம்” திரைப்படத்தின் முதல் பார்வை வெளியீடு!

Published

on

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘எல்ஜிஎம்’ எனும் ‘லெட்ஸ் கெட் மேரிட்’ திரைப்படத்தின் முதல் பார்வை வெளியாகி உள்ளது. முதல் பார்வையை சென்னை அணியின் கேப்டன் தோனி வெளியிட்டுள்ளார்.

திரைத்துறையில் தோனி

கிரிக்கெட்டைத் தாண்டி பல துறைகளில் கவனம் தனது கால் தடத்தை பதித்து வருகிறார் தோனி. அவ்வகையில் தோனி திரைத்துறையிலும் படங்களைத் தயாரிக்க முன்வந்துள்ளார். தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டெர்டெயின்மென்ட் நிறுவனம், தமிழில் ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘எல்ஜிஎம்’ எனும் ‘லெட்ஸ் கெட் மேரிட்’ என்ற படத்தை தயாரிப்பதாக அறிவித்தது.

கிரிக்கெட் வீரர் தோனிக்கும், சென்னை கிரிக்கெட் ரசிகர்களுக்கும் தனிப் பிணைப்பு இருப்பதனால், தனது புரொடக்‌ஷனில் உருவாகும் முதல் படத்தை தமிழில் தயாரிக்க முடிவு செய்துள்ளார் தோனி. அறிமுக இயக்குநர் ரமேஷ் இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் நடிகை நதியா மற்றும் யோகி பாபு ஆகியோரும் நடித்து வருகின்றனர். இந்தப் படத்திற்கு விஸ்வஜித் எனும் மலையாள இசையமைப்பாளர் இசையமைக்கிறார்.

எல்ஜிஎம் முதல் பார்வை

எல்ஜிஎம் படத்தின் முதல் பார்வையை தோனி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். உலக உருண்டைக்கு மேல் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா ஆகிய மூவரும் நின்று கொண்டிருக்கும் படியான முதல் பார்வை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Trending

Exit mobile version