டிவி

முதல் எவிக்‌ஷன் நாமினேஷன்.. சனம் ஷெட்டி? ஷிவானி?

Published

on

பிக்பாஸ் நடப்பு சீசனின் முதல் நாமினேஷன் இன்று தொடங்கியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 4-ன் 8-ம் நாளுக்கான இன்றைய முதல் ப்ரோமோ வெளியானது. அதில் முதல் எலிமினேஷனுக்கான நாமினேஷன் தொடங்கியுள்ளது.

அதில் சுரேஷ் சக்கரவர்த்தி, ஆரி என பெரும்பாலானோர் சன்ம் ஷெட்டியையும், ஜித்தன் ரமேஷ் மற்றும் சிலர் ஷிவானியையும் நாமினேஷன் செய்கிறார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளிலிருந்தே சனம் ஷெட்டி செயற்கையாக நடிக்கிறார் என்ற விமர்சனங்கள் மக்கள் மத்தியில் உள்ளது. அதையே பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களும் உறுதி செய்து நாமினேஷன் செய்துள்ளார்கள்.

அடுத்ததாக அதிகம் நாமினேஷன் செய்யப்பட்டவராக ஷிவானி உள்ளார். இவரும் முதல் நாள் முதலே பிற போட்டியாளர்களிடம் இணைவில்லை என்பது குற்றச்சாட்டாக உள்ளது. அதுவே ஷிவானியின் எவிக்‌ஷன் நாமினேஷனுக்கு காரணமாக அமைந்துள்ளது.

சம்யுக்தாவின் தோழியாக இருந்து வந்த சனம், அவரையே நாமினேட் செய்துள்ளார்.

Trending

Exit mobile version