இந்தியா

முத்தலாக் தடைச் சட்டத்தின் கீழ் பதிவானது முதல் வழக்கு!

Published

on

இஸ்லாமிய பெண்களை தலாக் தலாக் தலாக் என மூன்று முறை கூறி விவாகரத்து செய்யும் முறைக்கு தடை விதித்து மத்திய பாஜக அரசு முத்தலாக் தடைச் சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டம் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்று சில தினங்களுக்கு முன்னர் நடைமுறைக்கு வந்தது.

இந்நிலையில் இந்த முத்தலாக் தடைச்சட்டத்தின் கீழ் முதல் வழக்கு மும்பையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பையை சேர்ந்த ஜனாத் பேகம் என்பவரது கணவர் இம்தியாஸ் குலாம் வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்துகொண்டு வந்துள்ளார். இதனையடுத்து ஜனாத் பேகம் ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கும் போது கடந்த நவம்பர் மாதம் வாட்ஸ் அப் மற்றும் தொலைப்பேசி மூலம் தலாக் என மூன்றுமுறை கூறி விவாகரத்து செய்து வாழ மறுத்துள்ளார் இம்தியாஸ் குலாம்.

தனது கணவர் தலாக் கூறியதால் அதிர்ச்சியடைந்த ஜனாத் பேகம் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் அவரது குழந்தை குறைமாதத்தில் பிறந்துள்ளது. இந்நிலையில் தற்போது ஜனாத் பேகம் மும்பை காவல்துறையிடம் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். இதனையடுத்து இம்தியாஸ் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு எதிராக முத்தலாக் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜனாத் பேகம், நான் புனித குர்-ஆனுக்கு எதிரானவர் இல்லை. ஆனால் நான் உரிமைக்காகப் போராடுகிறேன் என்றார்.

seithichurul

Trending

Exit mobile version