உலகம்

வழுக்கை தலையை காரணம் காட்டி வேலைநீக்கம்.. நீதிமன்றத்தில் நடந்த டுவிஸ்ட்..!

Published

on

வழுக்கை தலை என காரணம் காட்டி வேலை நீக்கம் செய்யப்பட்ட ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்த நிலையில் வழக்கின் விசாரணையின் போது நடந்த டுவிஸ்ட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முழுவதும் சிக்கன நடவடிக்கை காரணமாக கூகுள், மைக்ரோசாப்ட், டுவிட்டர், உள்பட பெரிய நிறுவனங்களே வேலை நீக்கம் செய்து வருகின்றன என்பதும் இதனை அடுத்து வேலையில்லா திண்டாட்டம் அனைத்து நாடுகளிலும் பெருகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பெரிய நிறுவனங்கள் வரை சிறிய நிறுவனங்கள் வரை பல்வேறு காரணங்களால் ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வரும் நிலையில் இங்கிலாந்து நாட்டில் உள்ள டேங்கோ நெட்வொர்க் என்ற மொபைல் போன் நிறுவனம் தனது நிறுவனத்தில் பணிபுரியும் சிலரை வேலை நீக்கம் செய்தது.

அந்த நிறுவனத்தின் முதலாளி பிலிப் ஹெஸ்கெத்என்பவர் தன்னுடைய நிறுவனத்தில் 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் குழுவினர் பணியில் இருப்பதை விரும்பவில்லை. இளைஞர்களை அவர் அதிகம் வேலையில் சேர்க்க விரும்பியதால், 50 வயதுக்கு மேற்பட்டவர்களை உடனடியாக அவர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்தார். இதற்காக சில சமந்தமில்லாத காரணங்களை கூறி பலர் வேலை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

குறிப்பாக ஜோன்ஸ் என்பவர் வழுக்கை தலையாக இருப்பதால் அவர் வேலை நீக்கம் செய்யப்படுவதாக கூறப்பட்டிருந்தது. இதனை அடுத்து தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கூறி நீதிமன்றத்தில் ஜோன்ஸ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஜோன்ஸ் வாதாடுகையில் தன்னை வழுக்கைத் தலை என்ற காரணத்திற்காக தனது நிறுவனம் வேலை நீக்கம் செய்ததாகவும் ஆனால் தனது நிறுவனத்தின் உரிமையாளரே வழுக்கைத் தலையை கொண்டவர் என்றும் தெரிவித்தது பெரும் டுவிஸ்ட் ஆக இருந்தது.

இதனை அடுத்து நியாயமற்ற காரணங்களுக்காக ஜோன்ஸ் பணிநீக்கம் செய்யப்பட்டார் என்றும் அவருக்கு 70 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கின் தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version