இந்தியா

கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் சீரம் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து..!- வீடியோ

Published

on

கொரோனா வைரஸ்-க்கான தடுப்பூசியை செய்து வரும் சீரம் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கொரோனாவுக்கான தடுப்பூசியை தயாரித்து வரும் சீரம் நிறுவனத்தின் தயாரிப்புத் தொழிற்சாலை மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பூனேவில் அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் டெர்மினல் 1 பகுதியில் திடீரென இன்று மதியம் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டுள்ள கட்டடத்தில் தற்போது கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தீ விபத்துக்கான காரணம், தற்போதைய நிலை என எதைக் குறித்தும் வாய் திறக்க தொழிற்சாலை அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். தற்போதைய சூழலில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்து மிகத் தொலைவில் தான் கொரோனா தடுப்பூசி கட்டடம் இருக்கிறதாம். அதனால் கொரோனா தடுப்பூசிக்கும் தயாரிப்புப் பணிகளுக்கும் எவ்வித இடையூறும் இல்லை என்றே கூறப்படுகிறது.

Trending

Exit mobile version