விளையாட்டு

கிரிக்கெட் வீரர் சாஹல்-க்கு எதிரான சாதிய கருத்து- யுவராஜ் சிங் மீது பாய்ந்த வழக்கு!

Published

on

முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் இன்றைய இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் யுவேந்திர சாஹல் குறித்து சாதிய ரீதியாகப் பிரயோகித்த கருத்துக்காக இன்று அவர் மீது வழக்குப் பாய்ந்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு பேட்டி ஒன்றில் ரோகித் சர்மா உடன் இணைந்து யுவராஜ் சிங் ஒரு பேட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். அப்போது சாஹல் குறித்த எதேர்ச்சையான கேள்விக்கு யுவராஜ் சிங் சாதரணமாகக் கேலி செய்யும் வகையில் ஒரு கமென்ட் செய்தார். அதாவது, குறிப்பிட்ட ஒரு சாதியைக் குறிப்பிட்டு ‘இந்தச் சாதியைச் சேர்ந்தவர்கள் எதற்குமே லாயக்கு இல்லாதவர்கள்’ என்பது போன்று பேசியுள்ளார்.

இது போன்ற சொல்லாடல் வட இந்தியாவில் புழக்கத்தில் இருக்கிறது. யுவராஜ் சிங் இதை யதேர்ச்சையாக சொல்ல தாழ்த்தப்பட்ட சாதியை அவமதித்ததாகக் கூறி அன்றே பெரிய பிரச்னை எழுந்தது. அப்போதே யுவராஜ் சிங் தான் யாரையும் காயப்படுத்தும் நோக்கில் கூறவில்லை என்றும் காயம் ஏற்படுத்தி இருந்தால் நாட்டு மக்கள் என்னை மன்னிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

ஆனால், அன்றே யுவராஜ் சிங் மீது சில அமைப்புகளைச் சேர்ந்தோர் ஹரியானா மாநிலத்தில் உள்ள காவல் நிலையங்களில் புகார் கொடுத்தனர். இதன் அடிப்படையில் தற்போது யுவராஜ் சிங் மீது 3 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version