சினிமா செய்திகள்

அன்புச்செழியன் மகள் திருமணம்: ரஜினி, கமல் உள்பட திரையுலகினர் குவிந்தனர்!

Published

on

பிரபல பைனான்சியர், வினியோகஸ்தர், தயாரிப்பாளர் மதுரை அன்பு செழியன் மகள் திருமணம் இன்று நடைபெற்ற நிலையில் இந்த திருமணத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்

பிரபல பைனான்சியர் அன்புசெல்வன் மகள் சுஷ்மிதா இன்று சரண் என்பவரை திருமணம் செய்கிறார். இந்த திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என அன்புச்செழியன் கிட்டத்தட்ட அனைத்து திரை உலக பிரபலங்களுக்கும் நேரில் சென்று பத்திரிகை வைத்தார்

இந்த நிலையில் இன்று இந்த திருமணம் மிகவும் ஆடம்பரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த திருமணத்தில் உலகநாயகன் கமலஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தயாரிப்பாளர் போனி கபூர், தயாரிப்பாளர் தாணு, நடிகர் பிரபு, நடிகர் நாசர் மற்றும் அவரது மனைவி உள்பட பலரும் கலந்து கொண்டனர்.இதுகுறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending

Exit mobile version