இந்தியா

பயணப்படியை ரத்து செய்த மத்திய அரசு.. அதிர்ச்சியில் ஊழியர்கள்!

Published

on

கொரோனா ஊரடங்கு காலத்தில் அலுவலகம் வராத அரசு ஊழியர்களின் பயணப்படி ரத்து செய்வதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் அந்த மாதம் முழுவதும் அலுவலகம் வராத மத்திய அரசு ஊழியர்கள் பயணப்படி பெறுவதற்கான தகுதியில்லை. அலுவலகம் வரும் ஊழியர்களுக்காக வழங்கப்படுவதுதான் பயணப்படி.

எனவே மார்ச் 23 முதல் மே 20-ம் தேதி வரையிலிருந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் அலுவலகம் வராத ஊழியர்களுக்கு மட்டும் இந்த பயணப்படி ரத்து செய்யப்படுகிறது.

கொரோனா காலத்தில் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள், கற்பமாக இருக்கும் பெண் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வரத்தேவையில்லை. முடிந்தால் வீட்டில் இருந்து வேலை செய்யலாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இவர்களுக்கு அலுவலகம் வராத காலகட்டத்தில் பயணப்படி ரத்து செய்யப்படுவதாக தெரிவிகப்பட்டுள்ளது.

போக்குவரத்து வசதிகள் இல்லாத அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அலுவலகத்தில் இருந்து வாகன வசதி அளிக்கப்பட்டு இருந்தால், அதை பயன்படுத்தியவர்களுக்கு அந்த குறிப்பிட்ட கால அளவுக்குப் பயணப்படி ரத்து செய்யப்படுகிறது.

ஏற்கனவே இந்த காலகட்டத்திற்கான பயணப்படியை இவர்கள் பெற்று இருந்தால் அடுத்து வரும் மாதங்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version