இந்தியா

உலகின் வலிமை வாயந்த பெண்கள்.. போர்ப்ஸ் பட்டியலில் நிதியமைச்சர் நிர்மலாவுக்கு எந்த இடம்?

Published

on

போர்ப்ஸ் நிறுவனத்தின் உலகின் வலிமை வாய்ந்த பெண்கள் பட்டியலில் நான்காவது முறையாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்து 2019ஆம் ஆண்டு 34வது இடத்தில் இருந்த நிர்மலா சீதாராமன், 2020 ஆம் ஆண்டு 40 ஆவது இடத்திலும் 2021 ஆம் ஆண்டில் 37வது இடத்தில் இருந்தார். இந்த நிலையில் இந்த ஆண்டு அவர் உலகின் வலிமை வாய்ந்த பெண்கள் பட்டியலில் 36 ஆவது இடத்தில் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மட்டுமின்றி HCL Tech தலைவர் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா 53வது இடத்திலும், செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா (செபி) தலைவர் மாதபி பூரி புச் 54 வது இடத்திலும், ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா தலைவர் சோமா மோண்டல் 67வது இடத்திலும் இந்த ஆண்டு உலகின் வலிமை வாய்ந்த பெண்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மஜும்தார்-ஷா 72வது இடத்திலும், நாயர் 89வது இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில் 39 CEO க்கள் உள்ளனர், 10 நாட்டுத் தலைவர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலகின் வலிமை வாய்ந்த பெண்கள் பட்டியல் அவர்களிடம் இருக்கும் பணம், ஊடகங்களில் இருக்கும் தாக்கம் மற்றும் அரசியல் செல்வாக்கு உள்பட பல அம்சங்கள் பார்க்கப்பட்டு தேர்வு செய்யப்படுகின்றனர்.

இந்த நிலையில் தொடர்ந்து 4-வது முறையாக நிர்மலா சீதாராமன் அவர்கள் உலகின் வலிமை வாய்ந்த பெண்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version