தமிழ்நாடு

மே 6க்கு முன், மே 7க்கு பின்: நிதியமைச்சர் பி.டி.ஆரின் தனிக்கணக்கு!

Published

on

மே 6-ஆம் தேதி முதல் திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் மே 6க்கு முன் மே 7க்கு பின் என தனித்தனி கணக்காக வைக்க நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முடிவு செய்துள்ளார்.

தமிழ்நாடு முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வரும் தொகையை வெளிப்படையாக அறிவிக்க அறிவிக்க இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். இணையதளத்தில் மே 6-ஆம் தேதிக்கு முன்பு வந்த நிதியை தனி கணக்காகவும் மே 7ஆம் தேதிக்கு பின்பு வந்த நிதியை தனி கணக்காகவும் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு இதுவரை ரூ.472 கோடி நிதி வந்துள்ளது -நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வரும் தொகையை பொதுமக்களுக்கு அறிவிப்பதற்காக இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இந்த விஷயத்தில் மட்டுமின்றி அனைத்து விஷயத்திலும் வெளிப்படைத் தன்மையோடு இருக்க வேண்டும் என்பதே முதலமைச்சரின் அறிவுரை கூறியுள்ளார் என்றும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்காக கடந்த ஆண்டு முதல் நிதிகள் குவிந்து வருகிறது என்பது தெரிந்ததே. குறிப்பாக தொழிலதிபர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ச்சியாக நிதி அளித்து வருகின்றனர். இவ்வாறு தமிழக அரசுக்கு நிதி வழங்கப்பட்டது எவ்வளவு என்பது குறித்த தெளிவான தகவல் மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக தமிழக அரசு புதிய இணையதளம் ஒன்றை தொடங்கி உள்ளது.

இந்த இணையதளத்தில் மே 6ஆம் தேதிக்கு முன்பு வரை தமிழகத்திற்கு கிடைத்த நிதி எவ்வளவு என்றும் மே 7-ஆம் தேதி பின்பு தமிழகத்திற்கு கிடைத்த நிவாரண நிதி எவ்வளவு என்பது குறித்த விவரங்களை பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version