தமிழ்நாடு

வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் நிதியமைச்சர்: தவறு இருந்தால் நான் பொறுப்பு என்றும் அறிவிப்பு!

Published

on

தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று 11:30 மணிக்கு வெள்ளை அறிக்கையை வெளியிட இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சற்று முன் அவர் வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்

பத்திரிகையாளர்கள் முன் வெளியிட்ட இந்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு நிதி துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெள்ளை அறிக்கையில் தவறு இருந்தால் அதற்கு நானே பொறுப்பு என்று கூறிய அமைச்சர் பழனிவேல்ராஜன் அவர்கள் இந்த வெள்ளை அறிக்கை எனது பெயரில் வெளியானாலும் இந்த அறிக்கையை தயார் செய்ய உதவி செய்த முதல்-அமைச்சரின் செயலாளர்கள் மற்றும் எனது செயலாளர்கள் அனைவருக்கும் நன்றி கூறுவதாகவும் முதலமைச்சரின் வழிகாட்டலின் படி இந்த அறிக்கை வெளியிடப்படும் அவர் கூறியுள்ளார்

பல்வேறு மாநிலங்களில் நிதி நிலைமை தொடர்பாக வெள்ளை அறிக்கை ஆய்வு செய்து இந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் நிதி நிலைமை குறித்து இந்த வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

20 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழகத்தில் வெள்ளை அறிக்கை வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஏற்கனவே இதுவரை தமிழகத்தில் வெளியான வெள்ளை அறிக்கைகளை விட தற்போதைய வெள்ளை அறிக்கையில் கூடுதல் தகவல்கள் உள்ளன என்றும் தமிழகத்தின் கடன் நிலை வருவாயில் ஏற்பட்ட மாற்றம் செலவில் ஏற்பட்ட மாற்றம் குறித்த விபரங்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களை இன்னும் சில நிமிடங்களில் பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version