தமிழ்நாடு

கொரோனா பாதித்த மாநிலங்களுக்கு 1.1 லட்சம் கோடி: அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

Published

on

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் பின்தங்கி உள்ளது என்பது தெரிந்ததே. கொரோனா பாதிப்பு நிவாரணத்துக்காக ஒவ்வொரு மாநிலமும் கோடிக்கணக்கில் செலவு செய்து வருவதால் மற்ற துறைகளுக்கு நிதி ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி கொடுத்து உதவ வேண்டும் என்ற கோரிக்கை கிட்டதட்ட அனைத்து மாநிலங்களிலிருந்தும் எழுந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இதுகுறித்து மத்திய அரசு கடந்த சில நாட்களாக ஆலோசனை செய்த நிலையில் சற்று முன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இதுகுறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொரோனா புதிய நிவாரணத் திட்டங்கள் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தற்போது செய்தியாளர்களிடம் பேசி வருகிறார். அதில் கொரோனா பாதித்த மாநிலங்களுக்கு 1.1 லட்சம் கோடி கடன் வழங்கப்படும் என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு 50 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் தொழில் துறையை சேர்ந்தவர்களுக்கு 1.5 லட்சம் கோடி அவசரகால கடனுக்கு உத்தரவாதம் வழங்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதேபோல் மருத்துவமனை உள்ளிட்ட கட்டமைப்புகளுக்கு ரூபாய் 100 கோடி வரை கடன் வழங்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version