சினிமா செய்திகள்

2 படம் உங்களுக்கு பண்ணித் தரேன்.. பிரச்னையை ஃபைசல் செய்த விமல்!

Published

on

சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள களவாணி 2 படம் ரிலீஸ் நேரத்தில் பிரச்னையை சந்தித்து நிறுத்தப்பட்டது. இதற்கு காரணம் சிங்காரவேலன் என்பவர் தான். களவாணி 2 படத்தின் கதையின் காப்பிரைட் தன்னிடம் உள்ளதாகக் கூறி, கோர்ட்டில் படத்திற்கான தடை உத்தரவை வாங்கினார்.

சற்குணம் தரப்பு போராடி தடை உத்தரவை தகர்த்தாலும், படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் நீடித்தது. இந்நிலையில், உங்களுக்கு நான் 2 படம் பண்ணித் தரேன் என நடிகர் விமல் சிங்காரவேலனுக்கு வாக்குறுதி அளித்து, அதற்கான +ஆவணங்களில் கையெழுத்தும் இட்டுள்ளார். இதனால், களவாணி 2 படத்திற்கான பிரச்னை சரி ஆகியுள்ளது. விரைவில் படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பு தரப்பு இறங்கியுள்ளது.

களவாணி படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், களவாணி 2 படம் விமலுக்கு மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் விமல் காத்துக் கொண்டிருக்கிறார்.

seithichurul

Trending

Exit mobile version