இந்தியா

உலகளவில் ஆண்களை விட பெண்கள் குறைவான அளவில் சம்பளம் வாங்குகிறார்கள்?

Published

on

சர்வதேச அளவில் தொழிலாளர் வருவாய் விகிதம் குறித்த உலக சமத்துவமின்மை அறிக்கை 2022 ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.

இந்த ஆய்வறிக்கையின்படி உலகளவில் ஆண்களை விட பெண்கள் குறைவான அளவில் சம்பளம் வாங்குகிறார்கள் எனத் தெரிய வந்துள்ளது.

180 நாடுகளில், 1991-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரையில் கணக்கிடப்பட்டு இந்த சம்பள ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தொழிலாளர் வருவாயில் ஆண்கள் 82 சதவீதத்தையும், பெண்கள் 18 சதவீதத்தையும் பெற்று வருவதாகத் தெரியவந்துள்ளது. இந்தியாவை விட நமது அண்டை நாடுகளான நேபாளம், இலங்கை, சீனா உள்ளிட்ட நாடுகளில் பெண்களுக்கு அதிகளவில் வருவாய் கிடைக்கிறது.

ஆசியாவின் பெண்கள் சம்பள விகிதம் 27 சதவீதம் உள்ள நிலையில், இந்தியாவில் 18.3 சதவீதம் மட்டுமே உள்ளது.

பெண்களுக்கு அதிகம் வருவாய் வழங்குவதில் மோல்டாவா நாடு முதலிடத்திலும், குறைவான வருவாய் வழங்குவதில் ஏமன் நாடு கடைசி இடத்தையும் பிடித்துள்ளது.

பெண்கள் சம உரிமை, வேலைவாய்ப்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வந்தாலும் வருவாய் என்பதில் பெண்கள் இன்றளவும் ஆண்களுக்கு இணையாக வரவில்லை என்ற தகவல் அதிர்ச்சியளிக்கும் விதமாக உள்ளது.

ஒரு நாட்டில் சம்பள விகிதம் சரியாக உள்ளது என்றால் ஆண், பெண் இருவருக்கும் 50% என சம்பள விகிதம் இருக்க வேண்டும்.

seithichurul

Trending

Exit mobile version