இந்தியா

வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்ய ரூ.10,000 கட்டணம்? பொதுமக்கள் அதிர்ச்சி!

Published

on

வருமானவரி ரிட்டர்ன் தாக்கல் செய்ய ரூபாய் ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்பு நிதி அமைச்சர் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் வெளியாகலாம் என்றும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது வருமானவரி ரிட்டர்ன் தாக்கல் செய்பவர்களுக்கு எந்தவிதமான கட்டணமும் இல்லை என்று குறிப்பிடதக்கது. ஆனால் அதே நேரத்தில் இந்தியாவில் உள்ள ஒரு சதவீதம் மக்கள் மட்டுமே வருமான வரி செலுத்துவதாகவும், மற்றவர்கள் வருமான வரி சட்டம் 87 ஏ பிரிவின் வரி தப்பித்து வருமான வரி கட்டுவதில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது

இந்தியாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 1.46 கோடி தனிநபர்கள் வருமான வரி செலுத்துவதாகவும் இதன்மூலம் சுமார் 24 ஆயிரம் கோடி வருமான வரி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

இந்த நிலையில் வருமானவரி ரிட்டர்ன் தாக்கல் செய்ய கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. வருமானவரி ரிட்டர்ன் தாக்கல் செய்ய தனிநபர்களுக்கு ரூபாய் 1000 என்றும் நிறுவனங்களுக்கு ஐயாயிரம் முதல் பத்தாயிரம் வரை கட்டணம் நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் அரசுக்கு 3,000 கோடி வருமானம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது

வருமானவரி ரிட்டர்ன் தாக்கல் செய்ய கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டால் தேவையின்றி வரி படிவம் தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை குறையும் என்றும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் அதே நேரத்தில் தனிநபர் வருமான வரி தாக்கல் செய்ய ரூபாய் 1000 வசூலிக்கப்படும் என்ற தகவல் பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

seithichurul

Trending

Exit mobile version