செய்திகள்
எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல!… கண்ணீரை வரவழைக்கும் வீடியோ
![viral video - Bhoomitoday video](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/07/viral-video-2.jpg)
இந்த உலகத்தில் ஒரு தந்தைக்கும், பெண் குழந்தைக்கும் இடையே உள்ள உறவு என்பது மிகவும் அழகான ஒன்றாகும். எத்தனை வயதானாலும் பெண் குழந்தையை பாசமிகு மகளாகவே தந்தைகள் பார்ப்பதுண்டு.
இந்நிலையில், ஒரு மாற்றுத்திறனாளி வாலிபர் தனது பெண் குழந்தையுடன் விளையாடும் வீடியோ கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் தன் மகளுடன் விளையாடும் பின்னணில் இளையராஜாவின் ‘எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல..’ பாடல் ஒலிக்கிறது.
இந்த வீடியோவை பார்த்த பலரும் தங்களால் கண்ணீரை அடக்கமுடியவில்லை என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும், ‘இறைவன் இவரையும் மீசை வைத்த குழந்தையாகவே படைத்திருக்கிறார், தன் குழந்தையுடன் விளையாட’ என ஒருவர் பதிவிட்டுள்ளார்.
எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல…
பூக்களின் வண்ணம் கொண்டு
பிறந்த மகளே என் மகளே❤️????❤️ #raajaforlife #ilayaraaja #isaignani #Maestro pic.twitter.com/tSIeq8Dnqg— AjayKrishna (@ActorAjaykrish) July 19, 2021