ஆரோக்கியம்

கொழுப்பு, கல்லீரல் நச்சுக்களை நீக்கும் கருப்பு கவுனி!

Published

on

கவுனி கருப்பு அரிசி

தமிழகத்தில் கருப்பு அரிசி என்றால் இன்னொரு பெயர் “கவுனி கருப்பு அரிசி” என்று அழைப்பர். இந்த கருப்பு கவுனி அரிசியை இந்தியாவில் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை தான் அதிகமாகச் சாகுபடி செய்கின்றனர்.

இதில் அதிகப்படியான புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ஈ, நியாசின், கால்சியம், மெக்னீசியம் எனக் கருப்பு கவுனி அரிசியில் இல்லாத சத்துக்களே இல்லை என்று கூறலாம்.

உடலுக்குத் தேவையான ஏராளமான வைட்டமின் மற்றும் மினரல்களைக் கொண்டது.

கருப்பு கவுனியின் மருத்துவ பயன்கள்:

ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. ஒவ்வொரு 1/2 கப் கவுனி அரிசியிலும் 3 கிராம் நார்ச்சத்து நிறைந்துள்ளது.

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்குகிறது. மலச்சிக்கல் பிரச்சனையைக் குணப்படுத்த உதவுகிறது. புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்தும்.

இதயத்தின் இத்தத்த குழாய்களில் கொழுப்பு சேர்வது தவிர்க்கிறது. இதய நோயைத் தடுக்கவும், மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும் பயன்படுகிறது.

கல்லீரலில் உள்ள நச்சுகளை நீக்குகிறது. வயிற்றுப் போக்கு மற்றும் குடல் வீக்கம் பிறசக்கைகளைச் சரி செய்யவும் பயன்படுகிறது. செரிமானம் சீராக நடைபெற உதவி செய்யும்.

8) உடல் எடையைக் குறைத்துப் பராமரிக்க உதவும்.

உடலில் உள்ள தேவையற்ற வீக்கத்தைப் போக்கும். தினமும் ஒரு கப் அவித்த கவுணி சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். உடல் எடையைக் குறைக்க ஒரு சிறந்த உணவாக இருக்கும். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கத் தேவையான புரதம், இரும்புச் சத்து என நிறைந்த அரிசி இந்த கருப்பு கவுனி அரிசி.

ஆஸ்துமாவை குணப்படுத்தும் தன்மையுடையது. இது முடி உதிர்தல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்குச் சிறந்த உணவாக அமைகிறது. எலும்புகளை உருவாக்க கால்சியம் தேவைப்படுகிறது.

அதிக கார்போஹைட்ரேட் உட்கொள்ளல் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. கருப்பு கவுனியில் சாதாரண அரிசியை விட 5 மடங்கு அதிக மாவுச்சத்து இருப்பதால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.

Trending

Exit mobile version