ஆட்டோமொபைல்

200சிசி கேடிஎம் பைக்கை விட வேகமாகச் செல்லும் எலக்ட்ரிக் வாகனம்.. டிவிஎஸ் அதிரடி!

Published

on

பெங்களூரு: டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அல்ட்ராவைட்லேட் ஆட்டோமேடிவ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தினை வாங்கிய பிறகு 200 முதல் 250 சிசி திறன் மதிப்பிலான எலக்டிரிக் 2 சக்கர வாகனம் ஒன்றைத் தயாரித்து வெற்றிகரமாகச் சோதனை செய்து முடித்துள்ளது.

2016-ம் ஆண்டு முதல் இந்த வாகனத்தினைப் பலவேறு விதமாக உருமாற்றி 10,000 கிலோ மீட்டர் வரை சோதனை செய்துள்ளனர்.

அது மட்டும் இல்லாமல் இந்தியாவின் வேகமான 200 சிசி இரண்டு சக்கர வாகனமான கேடிஎம்-ஐ விட இந்த எலக்ட்ரிக் வாகனம் வேகமாகச் செல்வதாகும் சோதனை முடிவுகள் கூறுகின்றன.

இந்த எலக்ட்ரிக் வாகனம் 2019-ம் ஆண்டு இறுதிக்குள் பெங்களூருவில் முதற்கட்டமாக விற்பனைக்கு வரும் என்றும் பின்னர்ப் பிற மெட்ரோ நகரங்களில் பயன்பாட்டிற்கு வரும் என்றும் டிவிஎஸ் தரப்பில் இருந்து செய்தி சுருள் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

seithichurul

Trending

Exit mobile version