இந்தியா

உஷார்.. உங்கள் வாகனத்தில் FASTag இல்லையா? இன்று முதல் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிப்பு!

Published

on

பிப்ரவரி 15-ம் தேதி முதல் FASTag இல்லாமல் சுங்கச்சாவடிகளுக்கு வரும் வாகனங்களுக்கு, இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இன்று முதல் சுங்கச்சாவடிகளில் உள்ள அனைத்து லேன்களிலும் FASTag பயன்பாட்டுக்கு வருகிறது. FASTag இல்லாமல் அல்லது சரியாகச் செயல்படாத FASTag உடன் வரும் வாகனங்களுக்கு இனி இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும்.

2015-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட FASTag முறையால், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் டிஜிட்டல் முறையில் பணத்தைச் செலுத்திவிட்டு வாகனங்கள் நிற்காமல் செல்லலாம். இதனால் பயண நேரம் குறையும், எரிபொருள் மிச்சமாகும், வேகமாகப் பயணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

2021, ஜனவரி 1-ம் தேதி முதல் அனைத்து வாகனங்களுக்கு FASTag கட்டாயம் என்று தெரிவித்து இருந்தது. ஆனால் பிப்ரவை 14-ம் தேதி வரை விலக்கு அளித்து இருந்தது. தற்போது FASTag பொருத்துவதற்கான காலக்கெடு முடிவடைந்ததால் மத்திய அரசு இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.

இனியும் FASTag-க்கு காலக்கெடு நீட்டிக்கப்படாது?

வாகனங்களில் FASTag பொருத்தப்பட்டால், சுங்கச்சாவடிகளைக் கடக்கும் போது, அதில் உள்ள ரேடியோ கதிர்கள் மூலமாக, வங்கிக் கணக்கிலிருந்து தானாகப் பணம் பிடிக்கப்பட்டு நிற்காமல் கடந்து செல்லலாம். இந்த FASTag-ஐ வானங்களில் பொருத்து இனிமேலும் காலக்கெடு நீட்டிக்கப்படாது என்று மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

பல வழித்தடங்களில் FASTag பயன்படுத்துவது 90 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இன்னும் 10 சதவீதம் வாகனங்கள் மட்டுமே இன்னும் FASTag-ல் இணையாமல் உள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க: FastTag என்றால் என்ன? டிசம்பர் 1-ம் தேதிக்குள் இதை ஏன் நீங்கள் கண்டிப்பாக தெரிந்துக்கொள்ள வேண்டும்?

FASTag குறித்த புகார்கள்

பல இடங்களில் FASTag பயன்படுத்தும் போதும் டிராஃபிக் உள்ளிட்ட காரணங்களால் காலதாமதம் ஆகிறது. சில நேரங்களில் இரண்டு முறை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வங்கி கணக்கில் பணம் இருந்தாலும் FASTag சரியாகச் செயல்படுவதில்லை. உள்ளூர் மக்கள் சுங்கச்சாவடிகளைக் கடக்கவும் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது என்று புகார்கள் வருகின்றன. விரைவில் இவற்றுக்கு மத்திய அரசு தீர்வு அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version