வணிகம்

ஜனவரி 1-ம் தேதி முதல் அனைத்து வாகனங்களுக்கும் FASTag கட்டாயம்: நிதின் கட்காரி

Published

on

ஜனவரி1-ம் தேதி முதல் அனைத்து வாகனங்களுக்கு FASTag கட்டாயம் என்று மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

FASTag இருந்தால் டோல்-கேட்களில் வாகனங்கள் நிறுத்தும் தேவை இருக்காது. அதனால் நேரமும், எரிபொருளும் மிச்சமாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட FASTag 4 வங்கிகளுடன் இணைந்து லட்சம் வாகனங்களுக்கு விநியோகிக்கப்பட்டது. 2017-ம் ஆண்டு அது 7 லட்சம் ஆக அதிகரித்தது. 2018-ம் ஆண்டு 34 லட்சம் வாகனங்களில் FASTag பயன்படுத்தத் தொடங்கினர்.

2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் விற்பனை செய்யப்படும் அனைத்து வாகனங்களும் FASTag உடனே வருகின்றன. பிற வாகனங்கள் தேவை என்றால் FASTag-ஐ வாங்கிக்கொள்ளலாம் என்று இருந்தது. 2020, ஜனவரி 1-ம் தேதி முதல் 2017, டிசம்பர் மாதத்திற்கு முன்பு வாங்கிய வாகனங்களுக்கும் FASTag கட்டாயம் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இன்சூரன்ஸ் வாங்கவும் FASTag கட்டாயம்:

2021, ஏப்ரல் மாதம் முதல் வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் வாங்க வேண்டும் என்றாலும் FASTag கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள 80 சதவீதத்திற்கும் அதிகமான டோல்-கேட்களில் FASTag சேவை இயங்கி வருகிறது.

https://seithichurul.com/news/india/fastag-meaning-in-tamil-fastag-details-in-tamil-fastag-benefits-in-tamil-how-to-buy-fastag-how-to-recharge-fastag-how-to-link-bank-account-with-fastag-fastag-charges/18736/

Trending

Exit mobile version