இந்தியா

பிறந்தது ஏழை விவசாயி மகன்.. இன்று ரூ.25,000 கோடிக்கு சொந்தக்காரர்..!

Published

on

ஏழை விவசாயி மகனாக பிறந்த ஒருவர் தன்னுடைய உழைப்பின் மூலம் இன்று 25 ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரர் ஆகி உள்ள தகவல் பெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் ரவிபிள்ளை என்பவர் இப்போது மத்திய கிழக்கு நாடுகளில் சக்தி வாய்ந்த இந்தியர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். சுயமாக வணிக திறமையை கொண்ட அவர் பல ஏற்றத்தாழ்வுகளை கண்டபோதிலும் தற்போது ஒரு எழுச்சி ஊட்டும் தொழிலதிபராக உள்ளார் என்பதும் அவரது சொத்து மதிப்பு இன்று 25 ஆயிரம் கோடி என்றும் அதில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெலிகாப்டரை சொந்தமாக வைத்திருக்கும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வறுமையில் போராட்டம் செய்யும் ஏழை விவசாயி மகனாக பிறந்த கேரளாவை சேர்ந்த ரவி பிள்ளை இன்று புகழின் உச்சத்தில் உள்ளார் என்றும் அவரது சொத்து மதிப்பு இன்று 25 ஆயிரம் கோடிக்கு மேல் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவருக்கு சொந்தமாக சொகுசு ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்கள், ஹெலிகாப்டர் உள்பட பல உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் உள்ள கொல்லம் என்ற பகுதியில் பிறந்த ரவி பிள்ளை அன்றாடம் காய்ச்சியானா விவசாய குடும்பத்தில் பிறந்தார். ஆயினும் அவர் கல்வியில் சமரசம் செய்யவில்லை என்பதும் பள்ளி படிப்பு கல்லூரி படிப்பு மற்றும் கொச்சி பல்கலைக்கழகத்தில் வணிக முதுநிலை பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் ஒரு சிட்பண்ட் நிறுவனத்திடம் கடன் வாங்கி வணிகத்தை தொடங்கிய அவர் இந்தியாவின் ஒரு கட்டுமான நிறுவனத்தையும் உருவாக்கினார். ஆனால் துரதிர்வசமாக அவர் ஆரம்பித்த முதல் நிறுவனம் நஷ்டத்தில் மூடப்பட்டது.

#image_title

இருப்பினும் அவர் மனம் தளராமல் கடந்த 1972 ஆம் ஆண்டு சவுதி அரேபியா சென்றார். 150 பேருடன் கட்டுமான நிறுவனத்தை அங்கு தொடங்கிய அவர் தற்போது 70 ஆயிரம் பணியாளர்களைக் கொண்ட நிறுவனமாக வளர்த்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சவுதி அரேபியாவில் பல ஐந்து நட்சத்திர ஹோட்டல்களை ரவிபிள்ளை கட்டி உள்ளார் என்பதும் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள அப்பார்ட்மெண்டுகள் வீடுகள் பங்களாக்கள் சொகுசு வில்லாக்களையும் இவரது நிறுவனம் தான் கட்டி உள்ளது.

மேலும் உலகின் பல முன்னணி வங்கிகளையும் இவரது நிறுவனம்தான் கட்டி உள்ளது என்றும் கொல்லத்தில் உள்ள ஆர் மால் மற்றும் 300 படுக்கையறைகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனையையும் இவரது நிறுவனம்தான் கட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய கிழக்கு நாடுகளில் இவரது நிறுவனம் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது என்பதும் அவரது உழைப்பை பாராட்டி கடந்த 2010 ஆம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிய கௌரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தனது மகளுக்கு 55 கோடி ரூபாய் செலவு செய்து திருமணம் செய்தார் என்பதும் உலகின் பல்வேறு விஐபிகள் அந்த திருமணத்திற்கு வருகை தந்தனர் என்பதும் 30,000 பிரபலங்கள் அந்த திருமணத்திற்கு கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த திருமணத்திற்கான தற்காலிக மண்டபத்தை பாகுபலி தயாரிப்பு வடிவமைப்பால் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Mercedes-Maybach S600, S500, Rolls Royce Ghost, Land Rover Range Rover Autobiography, BMW 5-Series 520d மற்றும் Audi A6 Matrix உள்பட ஏராளமான சொகுசு கார்கள் சொந்தமாக வைத்திருக்கும் இவர் ஏழ்மை நிலையில் உள்ள விவசாயி மகனாக பிறந்து இன்று 25 ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version