இந்தியா

தொடர்ந்து வீரியமடைந்து வரும் போராட்டம்; எப்போது வரை தொடரும் – முதன்முறையாக காலக்கெடுவை தெரிவித்த விவசாயிகள்!

Published

on

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளில் கடந்த 70 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் தங்கள் போராட்டம் எப்போது வரை தொடரும் என்பது குறித்து முதன் முறையாக விவசாயிகள் வெளிப்படையாக ஒரு தேதியை அறிவித்துள்ளனர். இது குறித்த தகவலை விவசாய சங்கத்தினர் வெளியிட்டுள்ளனர்.

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மத்திய அரசுக்கு அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் என்னும் நோக்கில், நேற்று நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை முடக்கும் போராட்டம் செய்தனர் விவசாயிகள். இதன்படி நாட்டில் உள்ள நெடுஞ்சாலைகளை நேற்று மதியம் சில மணி நேரங்கள் முடக்கித் தங்களது எதிர்ப்பைக் காட்டினார்கள் விவசாயிகள். வட இந்தியாவின் பல்வேறு முக்கிய சாலைகள் இதன் மூலம் முடக்கப்பட்டன. பெங்களூருவிலும் முக்கிய நெடுஞ்சாலை ஒன்று விவசாய சங்கத்தினரால் முடக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இன்னும் எத்தனை நாளைக்குத் தான் விவசாயிகள் போராட்டம் தொடரும் என்பது குறித்து அவர்கள், நேற்றைய போராட்டத்தின் போது பேசுகையில், ‘எங்களது கோரிக்கை ஒன்று தான். வேளாண் சட்டங்கள் முழுவதும் ரத்து செய்யப் பட வேண்டும். அது வரை போராட்டம் வெவ்வேறு வகைகளில் தொடரும்’ என்று திட்ட வட்டமாக கூறினார்கள்.

அதே நேரத்தில், இந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி வரை போராட்டம் தொடரும் என்றும், அதற்குள் மத்திய அரசு, தங்களது கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்றும் என்றும் விவசாய சங்கத்தினர் நம்புவதாக தெரிகிறது. இதனால் அக்டோபர் 2 ஆம் தேதியோடு, டெல்லி போராட்டத்தை முடித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் விவசாயிகள் இருப்பதாக தெரிகிறது.

seithichurul

Trending

Exit mobile version