இந்தியா

விவசாயிகளுக்குப் போராட உரிமையுள்ளது – மத்திய அரசுக்கு கொட்டு வைத்த உச்ச நீதிமன்றம்!

Published

on

சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 23 நாட்களாக டெல்லியில் போராடி வருகிறார்கள் விவசாயிகள். இந்நிலையில் இந்தப் போராட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இன்று வந்த வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவுக்கு கீழ் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பாப்டே, ‘டெல்லியில் விவசாயிகள் போராடி வருவதை யாரும் தடுக்கக் கூடாது. டெல்லி நகரத்துக்குள் விவசாயிகள் வருவதை யாரும் தடுக்கக் கூடாது. அதே நேரத்தில் விவசாயிகள், வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட கூடாது. அமைதியான முறையில் மட்டுமே விவசாயிகள் போராட வேண்டும். அதேபோல நெடுஞ்சாலைகளை முடக்கியும் போராட்டத்தில் ஈடுபட கூடாது.’ என்று தெரிவித்தார்.

நேற்று இந்த வழக்கு விசாரணையின்போது உச்ச நீதிமன்றம், விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் நிலவிவரும் பிரச்சனை குறித்து பேசித் தீர்க்க ஒரு குழு அமைக்கப்பட வேண்டும் என்றும், அந்தக் குழுவில் வேளாண்மை பற்றி தெரிந்தரவர்கள் இருக்க வேண்டும் என்று கூறியது. இந்தக் குழுவானது இரு தரப்புக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்யும் எனத் தெரிகிறது.

விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் நடந்த பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Trending

Exit mobile version