கிரிக்கெட்

சிக்சர் மழையில் நனைந்த ரசிகர்கள்: பெங்களூரை வீழ்த்தியது சென்னை அணி!

Published

on

16 வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொண்டது. ‘டாஸ்’ வென்ற பெங்களூரு கேப்டன் டூ பிளிஸ்சிஸ் முதலில் பந்துவீச தீர்மானித்தார்.

அதிரடி காட்டிய சென்னை

சென்னை அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட்டும், டிவான் கான்வேவும் தொடக்கம் தந்ததனர். ருதுராஜ் 3 ரன்னில் அவுட் ஆக, அதிரடியாக விளையாடிய அஜிங்யா ரஹானே ரஹானே 37 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஷிவம் துபேவும் சிக்சர் மழைப் பொழிந்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கான்வே 83 ரன்களில் போல்டு ஆனார். ஷிவம் துபே 52 ரன்களும், அம்பத்தி ராயுடு 14 ரன்களும், ஜடேஜா 10 ரன்களும் எடுத்து வெளியேறினர்.

இலக்கு 227 ரன்கள்

மொயீன் அலி 19 ரன்களுடனும், கேப்டன் டோனி ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்கள் குவித்தது. அடுத்து 227 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணி களமிறங்கியது. விராட் கோலி 6 ரன்னில் போல்டு ஆக, அடுத்து வந்த மஹிபால் லோம்ரோர் டக்-அவுட்டில் வீழ்ந்தார். 3-வது விக்கெட்டுக்கு டூ பிளிஸ்சிஸ்சும், மேக்ஸ்வெல்லும் சிக்சர்களை தெறிக்கவிட்டு ரசிகர்களுக்கு வாணவேடிக்கை காட்டினர். மேக்ஸ்வெல் 76 ரன்கள் மற்றும் பிளிஸ்சிஸ்சும் 62 ரன்களில் ஆட்டமிழந்தார்.

சென்னை வெற்றி

பெங்களூரு அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 218 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

33 சிக்சர்

இந்த ஆட்டத்தில் சென்னை தரப்பில் 17 சிக்சர்கள் மற்றும் பெங்களூரு சார்பில் 16 சிக்சர்கள் என மொத்தம் 33 சிக்சர் விளாசப்பட்டது. இதன் மூலம் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஒரு ஆட்டத்தில் அடிக்கப்பட்ட முந்தைய அதிகபட்ச சிக்சர் எண்ணிக்கை சமன் செய்யப்பட்டது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version