கிரிக்கெட்

அவர் முன்னாடி மாதிரி இல்ல.. இப்ப ஆட்டமே வேற.. ரிஷப் பண்டை கொண்டாடும் ரசிகர்கள்!

Published

on

சென்னை: இந்திய அணியின் தற்போதைய விக்கெட் கீப்பராக செயல்பட்டு வரும் ரிஷப் பண்ட் தன்னுடைய திறமையின் மூலம் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வருவதாக ரசிகர்கள் கொண்டாட தொடங்கியுள்ளனர்.

அதிரடி ஆட்டங்கள் மூலமும் துடிப்பான கீப்பிங் காரணமாக அடுத்த தோனி என அனைவராலும் பாராட்டப்பட்டவர் ரிஷப் பண்ட். இந்திய அணியில் இருந்து தோனியின் ஓய்வுக்கு பிறகு அந்த இடத்திற்கு யார் வருவது என்கிற நீண்ட விவாதமே எழுந்தது. டெஸ்ட் போட்டிகளில் விர்திமன் சாகா நீண்ட காலமாக விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்தார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு ரிஷப் பண்ட் கீப்பராக செயல்பட்டார்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே ரிஷப் பண்ட் சரியாக விளையாடுவது இல்லையென்றும் வெறும் பேச்சு மட்டுமே இருப்பதாகவும் பல்வேறு தரப்பினராலும் விமர்சிக்கப்பட்டு வந்தார். ஆனாலும் கேப்டன் கோலி பண்டுக்கு தொடர்ந்து பல்வேறு வாய்ப்புகள் வழங்கி வந்தார். அவை அனைத்திலும் சொதப்பவே இந்திய அணியில் இருந்து ஓரம்கட்ட பட்டார். அவருடைய இடம் கே.எல்.ராகுலுக்கு கிடைத்தது.

Also Read: INDvENG – “எனக்காடா விக்கெட் கீப்பிங் தெரியாது..!”- விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரிஷப் பன்ட்

கிட்டதட்ட அவருடைய கிரிக்கெட் வழக்கை முடிவுக்கு வந்துவிடும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் பண்ட் சேர்க்கப்பட்டார். அந்த தொடரின் முதல் போட்டியில் விர்திமன் சாகா சொதப்பவே இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு கிடைத்தது.

இந்த முறை கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட பண்ட் தொடர் முழுவதும் அதிரடியாக ஆடினார். அந்த தொடரில் பண்ட் எடுத்த ரன்கள் 29, 36, 97, 23, 89 ஆகும். அதன் காரணமாக இங்கிலாந்து தொடரிலும் அவருக்கே வாய்ப்பு கிடைத்தது. தன்னுடைய ஃபார்மை இந்த தொடரிலும் தொடர்ந்தார் பண்ட். ஆனால் அவருடைய கீப்பிங்கில் இன்னும் முன்னேற வேண்டும் என்று மட்டும் விமர்சனங்கள் தொடர்ந்து வந்தன.

ஆனால் அவற்றுக்கும் பதில் கொடுக்கும் விதமாக இன்றைய போட்டியில் ரிஷப் பண்டின் கீப்பிங் அபாரமாக இருந்தது. குறிப்பாக 38 வது ஓவரை வீச வந்த சிராஜின் பவுலிங்கில் போப் குடுத்த கேட்சை பறந்து பிடித்த விதமும், பின்னர் மீண்டும் லீச் விக்கெட்டை காலி செய்த கேட்சாக இருக்கட்டும் இரண்டும் அபாரம்.

இதன்மூலம் கீப்பிங்கிலும் தன் மீதான விமர்சனங்கள் அனைத்திற்கும் தன்னுடைய ஆட்டத்தின் மூலம் இன்றைய போட்டியில் பதிலடி கொடுத்திருக்கிறார். இந்திய அணியில் இனிவரும் போட்டிகளில் ரிஷப் பண்ட் இடம் உறுதியாகியுள்ளது. ஆனால் அவர் இதே ஃபார்முடன் தொடர வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசையாக உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version