சினிமா செய்திகள்

ரஜினி இல்லத்தின் முன் நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டிய ரசிகர்கள்!

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 71வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அரசியல் பிரபலங்கள் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ரஜினி வீட்டு முன் ரசிகர்கள் நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 12ஆம் தேதி ரஜினிகாந்த் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று ரஜினியின் 71 வது பிறந்த நாளை அடுத்து அவரது பிறந்த நாள் விழாவை தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிபிடத்தக்கது. இந்த நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு ரஜினி வீட்டு முன் ரசிகர்கள் சிலர் கூடி கேக் வெட்டி ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளனர்.

இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. ரஜினிகாந்த் வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்றாலும் அவருக்கு வீட்டின் வெளியில் இருந்து ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version