சினிமா செய்திகள்

’விக்ரம் வேதா’ படத்தின் 4வது வருடம்: ரசிகர்கள் கொண்டாட்டம்!

Published

on

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் நடிப்பில் புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் உருவான திரைப்படம் ’விக்ரம் வேதா’. கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 21-ஆம் தேதி ரிலீஸான இந்த திரைப்படம் 11 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்று 60 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது
விஜய் சேதுபதி, மாதவன், ஷாரதா ஸ்ரீநாத், வரலட்சுமி உள்பட பலர் நடித்த இந்த திரைப்படத்துக்கு சாம் சி.எஸ் இசை அமைத்திருந்தார் என்பதும் இந்த படத்தின் இசை இந்த படத்தின் வெற்றிக்கு மிகப் பெரிய காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’விக்ரம் வேதா’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் நான்கு ஆண்டுகள் ஆனதை அடுத்து இன்று விஜய் சேதுபதி மற்றும் மாதவன் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். இது குறித்த ஹேஷ்டேக் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளது என்பதும் தமிழில் இயக்கிய புஷ்கர் – காயத்ரி தான் பாலிவுட்டிலும் இயக்க உள்ளார்கள் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘விக்ரம் வேதா’ ஹிந்தி ரீமேக்கில் விஜய்சேதுபதி கேரக்டரில் ஹிருத்திக் ரோஷன், மாதவன் கேரக்டரில் சைப் அலி கான் ஆகியோர் நடிக்க இருப்பதாகவும் மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version