கிரிக்கெட்

வந்த வாய்ப்பை.. அப்படியே தூக்கி வீசிய இளம் வீரர்.. பொறுப்பா ஆட மாட்டீங்களா.. கொதிக்கும் பேன்ஸ்

Published

on

இந்தூர்: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய வீரர் சுப்மான் கில் ஆடிய விதம் கடும் விமர்சனங்களை சந்தித்து உள்ளது.

இந்திய அணியில் மோசமாக ஆடி வந்த கே எல் ராகுல் இந்த போட்டியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். தொடர்ந்து மோசமாக ஆடிக்கொண்டு இருந்த இவர் மொத்தமாக தூக்கி அடிக்கப்பட்டு உள்ளார். பிசிசிஐ அமைப்பில் சில டாப் தலைகள் ராகுல் வேண்டாமே வேண்டாம் என்று கூறியதுதான் இதற்கு காரணம் என்கிறார்கள்.

#image_title

பிசிசிஐ கூட்டத்தில், ராகுல் மோசமாக ஆடுகிறார். அவர் மிக மோசமான பார்மில் இருக்கிறார். இப்படிப்பட்ட நேரத்தில் அவரை அணியில் எடுப்பது, மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுப்பது சரியாக இருக்காது. அவரை நீக்குங்கள் என்று கூறி உள்ளனர். பிளேயிங் லெவனை கேப்டன் – கோச் ஆகியோர்தான் தேர்வு செய்வார்கள். ஆனாலும் இந்த முறை பிசிசிஐ இதில் நேரடியாக தலையிட்டு விமர்சனம் வைத்து உள்ளதாம்.

இதுவே அவரின் நீக்கத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக களமிறக்கப்பட்ட சுப்மான் கில் இன்று நன்றாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணி இக்கட்டான நிலையில் இருக்கும் போதும் அவர் மோசமாக ஆடி சொதப்பி வருகிறார்.

முதல் இன்னிங்சில் 21 ரன்கள் எடுத்தவர்.. இரண்டாவது இன்னிங்சில் வெறும் 5 ரன்கள் மட்டும் எடுத்து ஏமாற்றம் அளித்து உள்ளார். இந்திய அணி சரிந்த போது கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அதிரடி காட்டாமல் சுப்மான் கில் இப்படி சொதப்பியது கடும் விமர்சனங்களை சந்தித்து உள்ளது. அவரின் ஆட்டம் மோசமாக இருந்ததாக நெட்டிசன்கள் விமர்சனம் வைத்து உள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version