இந்தியா

சோனுசூட்டை பார்க்க 809 கி.மீ தூரம் சைக்கிளில் சென்ற ரசிகர்.. வைரல் வீடியோ….

Published

on

தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் திரைப்படங்களில் வில்லன் வேடத்தில் நடித்து வருபவர் நடிகர் சோனு சூட். ஆனால், கடந்த வருடம் இந்தியாவில் கொரோனா பரவ துவங்கிய போது திடீரென மத்திய அரசு ஊரடங்கை அறிவித்தது. எனவே, வடமாநிலங்களில் இருந்து மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களுக்கு வேலைக்காக வந்த பலரும் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப முடியாமல் தவித்தனர். அதில் பலரும் நடந்தே தங்களின் ஊருக்கு சென்றனர்.

அப்போது அவர்களுக்கு உதவ சோனுசூட் முன் வந்தார். அவரின் சொந்த செலவில் பேருந்து மற்றும் விமானம் மூலம் பலரையும் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். எனவே, மக்கள் அவரை ஹீரோவாக பார்த்தனர். அதோடு மட்டும் அவர் நின்றுவிடாமல் உடல்நிலை பாதிக்கப்பட்டு பணமில்லாமல் சிகிச்சை பெற முடியாமல் இருந்த பலருக்கும் உதவினார். எனவே, மத்திய அரசே சோனு சூட்டுக்கு விருது கொடுத்து கவுரவித்தது. தற்போது அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.

இந்நிலையில், தெலுங்கானாவை சேர்ந்த சுரேஷ் என்கிற வாலிபர் மும்பையில் வசிக்கும் சோனுவை பார்க்க சைக்கிள் பயணித்தார். சுமார் 809 கி.மீ அவர் சைக்கிள் பயணம் மேற்கொண்டு அவர் சோனு சூட்டின் வீட்டிற்கு சென்றார். அவரை வரவேற்ற சோனூ சூட், என்னை சந்திக்க யாரும் இதுபோல் ரிஸ்க் எடுக்க வேண்டாம் எனக்கூறி அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும், தன்னை பார்க்க வந்த ரசிகருக்கு ஒரு அன்பு பரிசையும் கொடுத்து பேருந்தில் டிக்கெட் புக் செய்து கொடுத்து அவரை அனுப்பி வைத்தார்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version