டிவி

சித்தி 2 சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடிக்கப் போகும் பிரபல நடிகை யார்..?

Published

on

சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சித்தி- 2 சீரியலில் ராதிகா நடித்த சித்தி கதாபாத்திரத்தில் இனி நடிக்கப் போவது யார் என்ற தகவல் கசிந்துள்ளது.

சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களிலேயே ராதிகா சரத்குமாரின் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர்கள் வட்டம் உண்டு. அந்த வகையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் சித்தி 2 நாடகம் ஒளிபரப்பாகி வருகிறது. முழு நேர அரசியலில் கணவர் சரத்குமார் உடன் சேர்ந்து ஈடுபட உள்ளதாக சமீபத்தில் ராதிகா அறிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் சித்தி 2 சீரியலில் மட்டுமிருந்து இல்லாது சின்னத்திரையில் நடிப்பதில் இருந்தே மொத்தமாக விலகிக் கொள்வதாக ராதிகா அறிவித்தார். அடுத்து முன்னணியில் இருக்கும் சித்தி 2 சீரியலில் சித்தி கதாபாத்திரத்தில் நடிக்கப் போவது யார் என்ற கேள்வி அதிகப்படியாக எழுந்து காணப்பட்டது.

தற்போது சித்தி கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை ரம்யா கிருஷ்ணன் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். ரம்யா கிருஷ்ணன் ஒப்புக்கொள்ளாத சூழலில் கைவசம் நடிகை தேவயாணி மற்றும் மீனா ஆகிய இருவரும் இருப்பதால் இவர்களுள் நிச்சயமாக ஒருவர் சித்தி ஆக மீண்டும் சின்னத்திரையில் அடியெடுத்து வைப்பர் எனக் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version