தமிழ்நாடு

பணியின்போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களுக்கு நிதியுதவி உயர்வு: தமிழக அரசு அரசாணை!

Published

on

பணியின்போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு நிதியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்கள் பணியின் போது உயிரிழந்தால் அவர்களுடைய குடும்பத்துக்கு பாதுகாப்பு நிதியாக இதுவரை ரூபாய் 3 லட்சம் வழங்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொகையை உயர்த்த வேண்டும் என அரசு ஊழியர்கள் தரப்பில் இருந்து பல ஆண்டுகளாக வேண்டுகோள் விடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது அந்த கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு அது குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் பணியின்போது உயிர் இழக்கும் அரசு ஊழியர்களுக்கான குடும்ப பாதுகாப்பு நிதி இதுவரை ரூபாய் 3 லட்சமாக இருந்த நிலையில் இனிமேல் ரூபாய் 5 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்த மாதம் முதல் அதாவது செப்டம்பர் மாதம் முதல் இதற்காக மாதாந்திர பிடித்தம் ரூபாய் 60லிருந்து ரூ.110 ஆக உயர்த்தப்படுகிறது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பை தமிழக அரசு ஊழியர்கள் தரப்பில் இருந்து வரவேற்கப்பட்டுள்ளது என்பதும், தமிழக அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version