தமிழ்நாடு

இந்தாங்க என்னோட கடன் ரூ.2.63 லட்சம்: ‘தமிழன்’ பட பாணியில் காந்தியவாதி ஏற்படுத்திய பரபரப்பு

Published

on

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் நேற்று வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2.63 லட்சம் கடன் இருக்கிறது என்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு தமிழக மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் தமிழக அரசு அறிவித்த தனது குடும்பத்திற்காக கடனை கடன் தொகை 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 ரூபாயை நாமக்கல்லை சேர்ந்த காந்தியவாதி ஒருவர் நாமக்கல் ஆர்டிஓ அலுவலகத்தில் செலுத்த வந்தார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

ஆனால் நாமக்கல் ஆர்டிஓ அந்த செக்கை வாங்க மறுத்தார். இந்த செக்கை பெறுவதற்கு எனக்கு அதிகாரம் இல்லை என்றும் உயர் அதிகாரிகளிடம் வழங்குங்கள் என்றும் அவர் அறிவுறுத்தினார். இதனையடுத்து அந்த காந்தியவாதி உயரதிகாரிகள் குறித்த விபரத்தை கேட்டறிந்தார்.

விஜய் நடித்த தமிழன் திரைப்படத்தில் இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் உள்ள கடன் தொகையில் விஜய் தனது பங்கிற்கான கடனை செலுத்தி முன்னுதாரணம் செய்வது போன்ற காட்சி இருக்கும். அதே போன்று தமிழகத்தின் காந்தியவாதி ஒருவர் 2.63 லட்சமான தனது பங்கு கடனை செலுத்த முன்வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காந்தியவாதி முன்வந்தது போல் தமிழகத்தில் உள்ள பணக்காரர்கள் தங்கள் பங்கின் கடனை செலுத்த முன்வந்தாலே கடன் தொகையில் மிகப்பெரிய அளவு குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version