சினிமா செய்திகள்

75 நாட்களில் படமாக்கப்பட்ட அருவி இயக்குநரின் அடுத்த படைப்பு!

Published

on

அருவி எனும் அற்புத சினிமாவை கொடுத்து தமிழ் சினிமா உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் அருண்பிரபு புருஷோத்தமன். இவர், அடுத்ததாக சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வாழ் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.

விரைவில் வெளியாகவுள்ள வாழ் படத்தின் ஆச்சர்யமூட்டும் சுவாரஸ்ய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த படம் வெறும் 75 நாட்களில் சுமார் 100 லொகேஷன்களில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரடொக்‌ஷன் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படம் ரசிகர்களின் பார்வைக்காக திரைக்கு வர தயாராகி கொண்டிருக்கிறது.

இந்த படத்தைக் குறித்த இந்த அப்டேட்டை புகைப்படங்களுடன் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், வெளிநாட்டுக்காரர்கள், பைக் ரேசர்கள் என படம் வித்தியாசமான ஜானர்களில் செல்வது கண்கூடாகத் தெரிகிறது.

ஒரு மனிதனின் வாழ்க்கை பயணத்தில் நடக்கும் சுவாரஸ்யங்களின் தொகுப்பாக வாழ் படம் வரும் என்ற எதிர்பார்ப்பு இந்த புகைப்படத்தின் மூலம் தெளிவாகிறது.

Trending

Exit mobile version