இந்தியா

செமஸ்டர் தேர்வுகள் நேரில் தான் நடைபெறும்.. போலி செய்தியா?

Published

on

கொரோனா காரணமாகக் கடந்த 1.5 ஆண்டுகளுக்கும் மேலாக செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் செமஸ்டர் தேர்வுகள் நேரில் தான் நடைபெறும். ஆன்லைனில் இனி செமஸ்டர் தேர்வுகளை நடத்தக்கூடாது என பல்கலைக்கழக மானியக் குழு யுஜிசி அறிவித்தாக சமுக வலைத்தளங்களில் செய்தி இன்று காலை வெளியானது.

மேலும் படிக்க: இனிமேல் ஆன்லைன் தேர்வுகள் கிடையாது – யுஜிசி அறிவிப்பு

அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள யுஜிசி அதிகாரிகள், அந்த செய்தி பொய் என தெரிவித்துள்ளனர். யுஜிசி பெயரில் யாரோ தவறான தகவலைச் சமுக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். அதை யாரும் நம்ப வேண்டாம் என கூறியுள்ளனர்.

தமிழகத்தில் கல்லூரிகளின் நடப்பு செமஸ்டர் தேர்வுகள் ஜனவரி 20-ம் தேதிக்குப் பிறகு நேரில் நடைபெறும் என தமிழ்நாடு உயர் கல்வித் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version