சினிமா செய்திகள்

‘விக்ரம்’ படப்பிடிப்பில் இணைந்த ஃபகத் பாசில் – வெளியான வைரல் புகைப்படம்!

Published

on

அரசியல் கட்சி ஆரம்பித்து பிஸியாக இருந்த கமல் ஹாசன், மீண்டும் சினிமாவுக்கு ‘விக்ரம்’ திரைப்படம் மூலம் ரீ – என்ட்ரி கொடுக்கிறார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பின. இந்தப் படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் ‘விக்ரம்’ படத்தை இயக்குகிறார். இந்தப் படத்திற்கான ஷூட்டிங் சில நாட்களுக்கு முன்னர் பூஜையுடன் ஆரம்பித்தது.

அந்தப் படப் பூஜையில் விஜய் சேதுபதியும் கமலும் கலந்து கொண்டனர். ஆனால் ஃபகத் அப்போது வேறொரு படத்தில் பிஸியாக இருந்தார். தற்போது அவரும் விக்ரம் ஷூட்டிங்கில் பங்கேற்று நடித்து வருகிறார்.

இந்நிலையில் கமலுடன் ஃபகத் எடுத்துக் கொண்ட போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

author avatar
seithichurul

Trending

Exit mobile version