சினிமா செய்திகள்
’விக்ரம்’ படத்தின் புதிய போஸ்டர்: யாருடைய ஸ்பெஷல் தெரியுமா?
![kamal vikram - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/04/kamal-vikram.jpg)
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ’விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் பகத் பாசில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து ’விக்ரம்’ பட குழுவினர் சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் பகத் பாசில் கேரக்டர் குறித்த போஸ்டராக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகத் பாசிலுக்கு தனது பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசன் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இந்தப் படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார். மேலும் பகத் பாசில் ஒரு விஞ்ஞானி வேடத்தில் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.
ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி, வில்லன் மற்றும் விஞ்ஞானி ஆகிய மூவருக்கும் இடையே நடக்கும் ஒரு போராட்டம் தான் ’விக்ரம்’ படத்தின் கதை என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் கமல் ஹாசன் மற்றும் விஜய்சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் இதற்காக காரைக்குடியில் லோகேஷன் பார்த்து இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
Happy birthday Fahadh. வளமும் நலமும் சூழ வாழ்த்துக்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) August 8, 2021
ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் முடிந்துவிடும் என்றும் அதன்பின்னர் ’பாபநாசம்2’ படத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.