இந்தியா

ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் ஜூபைர் 24 நாட்களுக்கு பிறகு விடுதலை!

Published

on

போலி செய்திகளைக் கண்டறிந்து அதன் உண்மைத் தன்மையை விளக்குபவரும், ஆல்ட் நியூஸ் இணை நிறுவனருமான முகமது ஜூபைர் புதன் கிழமை டெல்லி திகார் சிறையில் இருந்து விடுதலையாகியுள்ளார்.

2018-ம் ஆண்டு முகமது ஜூபைர் சமூக வலைத்தளத்தில் செய்த பதிவு ஒன்று மதக் கலவரத்தைத் தூண்டும் விதமாக இருப்பதாகக் கூறி 24 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.

முகமது ஜூபைர் மீது உத்திர பிரதேசம் காவல் துறையினர் 6 வழக்குகளைப் பதிவு செய்து இருந்த நிலையில், இவரது வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம் இவருக்குப் புதன்கிழமை ஜாமீன் வழங்கியது.

எனவே 24 நாட்கள் சிறைக்குப் பிறகு உச்ச நீதி மன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் முகமது ஜூபைர் புதன்கிழமை மாலை 6 மணிக்கு ஜாமீன் பெற்று விடுதலையாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version