உலகம்

ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் திடீர் முடக்கம்: என்ன காரணம்?

Published

on

அன்றாட வாழ்க்கையில் முக்கியமான ஒன்றாகவே மாறிவிட்டன சமூக வலைதளங்கள். இதில் முக்கிய சமூக வலைதளங்களான டுவிட்டர், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவை உலகம் முழுவதும் பலஆயிரக்கணக்கான பயனர்களுக்கு முடங்கியுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

#image_title

இந்த சமூக வலைதள முடக்கத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது அமெரிக்காவில் உள்ள சமூக வலைதள கணக்குகள் தான். பல டுவிட்டர் பயனர்களுக்கு புதிதாக டுவீட் செய்யும் போது, “நீங்கள் டுவீட் அனுப்புவதற்கான தினசரி வரம்பைத் தாண்டிவிட்டீர்கள்” என்று வருகிறது. இதனையடுத்து டுவிட்டர் சப்போர்ட் அறிவித்துள்ள தகவலில் இந்த திடீர் முடக்கம் பற்றி அறிந்திருக்கிறோம், உங்களில் சிலருக்கு டுவிட்டர் எதிர்பார்த்தபடி செயல்படாமல் இருக்கலாம். சிக்கலுக்கு மன்னிக்கவும். இதை சரிசெய்வதற்கு நாங்கள் விழிப்புடன் செயல்பட்டு வருகிறோம் என்று கூறியுள்ளது.

டுவிட்டரை போன்று, ஃபேஸ்புக்கில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கணக்குகளும், இன்ஸ்டாகிராமில் 7 ஆயிரம் கணக்குகளும் முடக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் திடீரென்று ஒரே நேரத்தில் முக்கிய மூன்று சமூக வலைதளங்களில் ஏற்பட்ட இந்த முடக்கம் பயனர்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version