உலகம்

இனிமேல் செய்தியை படிக்காமல் பகிர முடியாது: ஃபேஸ்புக்கில் புதிய வசதி!

Published

on

செய்திகளை முழுமையாக படிக்காமல் அந்த செய்தியின் லிங்க் அல்லது புகைப்படத்தையோ பகிர முடியாது என்ற வசதியை பேஸ்புக் அறிமுகம் செய்து உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் ஒரு லிங்கில் செய்தி அல்லது புகைப்படம் வந்தால் அந்த செய்தியை முழுமையாக படிக்காமல் பலர் தங்களது நண்பர்களுக்கு பகிர்ந்து விடும் வழக்கம் தொடர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தற்போது பேஸ்புக் ’ரீட் ஃபர்ஸ்ட்’ என்ற புதிய வசதியை சோதனை முறையில் இன்று முதல் அறிமுக படுத்தி உள்ளது.

இதன்படி இனிமேல் பேஸ்புக்கில் பதிவு செய்யப்படும் செய்தி மற்றும் லிங்குகளை முழுமையாக படிக்காமல் மற்றவர்களுக்கு பகிர முடியாது. பேஸ்புக் பயனாளர்கள் ஒரு செய்தியின் தலைப்பு அல்லது படத்தை மட்டும் பார்த்துவிட்டு அதை பகிர முயன்றால் ஒரு pop-up போன்றும். அந்த pop-upல் நீங்கள் இந்த செய்தியை முழுமையாக படிக்காமல் தங்களால் பகிர முடியாது என்று செய்தி தோன்றும்.

இதன் மூலம் பயனர்கள் முழுமையாக ஒரு செய்தியை அறிந்து கொள்வது மட்டுமின்றி போலியான தகவல்கள் வதந்திகள் பரப்பப்படுவதை கட்டுப்படுத்த இந்த வசதி பயன்படும் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. சோதனை முறையாக அறிமுகப்படுத்தியுள்ள இந்த வசதி விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version