வணிகம்

மார்க் ஜூக்கர்பெர்கின் பாதுகாப்புக்காக ஒரே ஆண்டில் ரூ.171 கோடி செலவு செய்த பேஸ்புக்!

Published

on

பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்கின் பாதுகாப்புக்காக 2020-ம் ஆண்டு மட்டும் 23 மில்லியன் அமெரிக்க டாலர், இந்திய மதிப்பில் 171 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு மார்க் ஜூக்கர்பெர்க்குக்கு வந்த அச்சுறுத்தல் காரணமாகப் பாதுகாப்புக்குக் கூடுதல் செலவு ஆனதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.

மேலும் கோவிட்-19 தொற்று போன்றவற்றால், மார்க் ஜூக்கர் பெர்க்கின் குடும்பத்தின் பாதுகாப்பு செலவுகள் அதிகரித்துள்ளது.

2020-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றதால், ஏற்கனவே முந்தைய அதிபர் தேர்தலில் டிரம்புக்கு பேஸ்புக் உதவியதாகவும் கூறப்பட்டதால் மார்க் ஜூக்கர் பெர்க்குக்கு அச்சுறுத்தல்கள் வந்ததாகக் கூறப்படுகிறது. அதற்காகக் கூடுதல் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தித் தந்ததாகவும் கூறப்படுகிறது.

Mukesh Ambani in Reliance Industries

இந்திய கோடீசுவரரான முகேஷ் அம்பானிக்கு Z+ பாதுகாப்பு வழங்கப்படுகிறது. மாதத்துக்கு அம்பானியின் பாதுகாப்புக்காக 15 முதல் 16 லட்சம் ரூபாய் வரை செலவாவதாகத் தகவல்கள் கூறுகின்றன. முகேஷ் அம்பானியின் ஆண்டு சம்பளம் 15 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது,

Trending

Exit mobile version